வாக்காளர் அட்டை வினியோகம்


எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு 15 மாவட்டங்கள் உள்ளடங்கிய வகையில் இவ் வார இறுதியில் தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இத் தேர்தல் ஒத்தினை சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச அச்சு திணைக்களத்தினால் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு வரும் நிலையில் அடுத்தவாரமளவில் வாக்காளர் அட்டைகளை வினியோகிக்க கூடியதாக இருக்கும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

தேர்தலை முன்னிட்டு சகல மாவட்டங்களிலும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மத்திய நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.


No comments: