பெண்ணாருவரின் சடலம் மீட்பு


நாவலபிட்டி மாவெலி கங்கையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்தாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

நாவலபிட்டி ஜயசுந்தரஹோபிட்ட பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சஹிருநீஷா என்பவரே 09/06 காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இன்று காலை 6.30 மணியளவில் குளிக்க சென்றவர் திரும்பிவராத நிலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பவ்வாகம பகுதியில் மாவெலி காங்கையின் கரையோரத்தில் குறித்த பெண் சடலமாக இருப்பதை கண்டுள்ளனர்

மீட்கப்பட்ட சடலம் நாவலபிட்டி நீதவான் தலைமையில் மரணவிசாரணை இடம்பெற்ற பின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதணைக்காக நாலவபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்ததுடன் மரணம் தொடர்பில் மேலதிக விசாணைகள் தொடர்வதாக தெரிவித்தனர்.

No comments: