அழிவடையும் தருவாயில் விலங்கினங்கள்


தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மனித வம்சம் பெரும் அபாய கட்டத்தினை சந்தித்திருக்கின்றது.

உயிர்களை பாதுகாக்க 2020ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக காணப்படுவதாக குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் இதுவரையில் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் பத்து இலட்சம் விலங்கினங்கள் முற்றுமுழுதாக அழியும் அபாய கட்டத்தில் காணப்படுவதாக கடந்த ஆண்டு வெளிவந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

வனத்தில் உலாவும் விலங்கினங்களை வேட்டையாடுவது வர்த்தகம் செய்வது போன்ற செயல்களால் பல்வேறு வகையான தொற்று நோய்கள் உருவாகும் அபாயம் குறித்து விஞ்ஞானிகள் ஏற்கனவே கணித்துள்ளனர்

மனிதர்களால் 500 கும் மேற்பட்ட பாலூட்டிகள் பறவைகள் மற்றும் பல விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் காணப்படுகின்றன தற்போது உலகில் ஆறாம் கட்டமாக இன அழிப்பு நடைபெற ஆரம்பித்து விட்டதற்கான ஆதாரம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

No comments: