விகாரை காணி அளிவீடு நடவடிக்கையை இடை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு


(பொத்துவில் நிருபர்)

பொத்துவில் முகுது மகா விகாரைக்கான காணி அளவீட்டுப் பணிகளை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தின் முகுது மகா விகாரைக்கான காணி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தால் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, நீதவான் எம்.எச்.முஹம்மட் றாபி, இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.


No comments: