இது பொய்யான செயற்பாடு -ஜெயானந்தமூர்த்தி


(கனகராசா சரவணன்)

தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக மீறி   சில அரசியல் வாதிகள் வாழைச்சேனை கடதாசி ஆலையில் வேலை பெற்றுதருவதாக, வீடுகள் அமைத்து தருவதாக காணிகள் பெற்றுத்தருவதாக விண்ணப்பங்களை சேகரித்து மக்களுக்கு  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பிரச்சசாரங்களில் ஈடுபடுகிறார்கள் என ஸ்ரீ பொதுஜன பெரமுனை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்கைகள் நிலையத்தில்  நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை பொதுஜன பெரமுனவை ஆதரிப்பதென்ற வகையில் எமது மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள் ஏனென்றால் கடந்த வருடங்களில் உங்களுக்கு நன்றாக தெரியும் இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சரியான சேவைகளை செய்யவில்லை என்றவொரு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருக்கின்றது. நாங்கள் இப்பொழுது பிரச்சாரத்திற்க்கு செல்லும் போது மக்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எமக்கு தெரிவிக்கின்றனர். எனவே மக்கள் ஏமாற்றமடைந்தவர்களாகவும் வெறுப்படைந்தவர்களாகவும் இந்த தமிழ்க்கட்சிகளில் ஒரு வெறுப்படைந்தவர்களாக தான் காணப்படுகிறார்கள்.

நாங்கள் இம்முறை இந்த தேசிய கட்சியில் இணைந்திருப்பதை மக்கள் வரவேற்கிறார்கள். மக்கள் எமது கட்சிக்கு வாக்களிக்கின்ற வகையில் இருக்கின்றார்கள். இம்முறை நாங்கள் வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக இருக்கின்றது. அத்தோடு தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக சிலர் நடந்து கொள்வதாக மக்கள் எமக்கு அறிவித்திருக்கிறார்கள். அதே போல் சில வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக இப்பவே வேலை பெற்று தருவதாக இளைஞர் யுவதிகளிடம் சொல்வதும் வீடுகள் அமைத்து தருவதாக கூறி தகவல்களை சேகரிப்பதும் காணிபெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கூறியும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றார்கள். இது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயம்.

ஜனநாயக முறைப்படி மக்களுடன் பழகி மக்களை அனுகி வாக்குப்பெறுவதே முறையான விடயம். ஆனால் அந்த மாதிரியான ஏமாற்று விடயங்களை சில அரசியல் வாதிகள் சில கட்சிகள் செய்து வருகின்றார்கள். இதனால் மக்கள் ஏமாற்றமடைவதுடன் மக்கள் அலைச்சலுக்குள்ளாகிறார்கள். தூர இடங்களில் இருந்து கூட மட்டக்களப்பு நகருக்கு வந்து இந்த விண்ணப்பங்களை பெறுகிறார்கள். ஆனால் தேர்தல் காலங்களில் வேலைகளை பெற்றுக் கொடுக்கவும் நியமனங்களை வழங்கவும் முடியாது.

கடதாசி ஆலையை பொறுத்தவரையில் அங்கு இப்பொழுது துப்பரவு வேலைகள் தான் நடைபெறுகின்றது. ஆனால் சிலர் அங்கு பல ஆயிரம் வேலை நியமனங்களை பெற்றுத் தருவதாக கூறி பிரச்சசாரங்களில் ஈடுபடுகிறார்கள் என அவர் தெரிவித்தார். 

No comments: