மட்டக்களப்பில் போதை பொருள் வைத்திருந்த மூவருக்கு விளக்கமறியல்


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட தனியார் பஸ் பஸ்சாரதி மற்றும் நடத்துனர் , தனியார் பஸ் ஆசன முற்பதிவு மேற்கொள்ளும் ஒருவர் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 7 ம் திகதிவரை வியக்கமறயலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று செவ்வாய்க்கிழமை (23) உத்தரவிட்டார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  நேற்று திங்கட்கிழமை (22) மாலை 5 மணியவில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து 630 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற கொழும்புக்கான தனியார் பஸ் ஆசன முற்பதிவு மேற்கொள்ளும் ஒருவரை கைதுசெய்தனர்

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இரவு 8 மணியளில் தனியார் பஸ்சாரதி மற்றும் பஸ் நடத்துனர்கள் உட்பட இருவர் 109 மில்லிக்கிராம் ,129 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை வியாபாரத்துக்கு எடுத்துச் சென்ற போது விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்

கைது செய்யப்படடவர்களை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (23) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 7 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


No comments: