சூடு பிடிக்கும் களம் மோதிக் கொள்ளும் கருணா - சுமந்திரன்


நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்தேசிய கூட்மைப்பின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் ப.உறுப்பினருமாகிய எம்.ஏ சுமந்திரன் முன்னாள் பிரதியமைச்சர்ரும் அகில இலங்கை தமிழர் மகா சபை வேட்பாளருமாகிய கருணா (வி.முரளிதரன்) தொடர்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று விஷேடமாக நன்றாக தெரியும் . கண்ண கண்டவர்களின் கூற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்ச்சித்து வருவதுடன் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனை தேர்தல் வியாபாரி என குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருணா  (வி.முரளிதரன்) இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்கெள்வதில்லை அவருக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது. அவர் கொழும்பிலே பிறந்து வாழ்ந்தவர். சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர்


கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடையும் என்பதை உணர்ந்து கொண்டுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இங்கு வந்து மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களுடன் ஒப்பிடும் போது சுமந்திரன்அரசியல் கத்துக்குட்டி தான். என்றார்.
ஒப்பிட்டு நோக்கும் போது இரு கட்சிகளுக்கும் இடையில் வார்த்தை ரீதியில் மோதல் இருக்கின்றமை தெழிவாகின்றது.  அம்பாரை மாவட்டத்தினை பொறுத்த மட்டில் இம்முறை வாக்காளர்கள் மிக அவதானத்துடன் செயல்படுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

மக்களை திசைமாற்ற இரண்டு கட்சிகளும் மறைமுகமாக மோதிக் கொள்கின்றதா ? என்பது கேள்விக்குறியான ஒரு விடையமாக காணப்படுகின்றது.

தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத தரப்பினரை தாம் இம்முறை  தெரிவு செய்து என்ன பலன் ? என்ற பல கேள்விகள் மக்களிடையே உலாவதை எம்மால் அவதானிக்க கூடியதாகவுள்ளது.

No comments: