அரச அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பில் நீங்களும் அறிவிக்கலாம்


நாட்டில் பொதுமக்களின் முறைப்பாடுகள் ,மனக் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு குறைகேள் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு எஸ். எம். விக்ரமசிங்க மேற்படி அதிகாரியாக பெறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமக்குரிய நிர்வாகப் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தும் போது அரச அதிகாரிகள் தமது பொறுப்பிலிருந்து விலகியிருந்தால்
அல்லது தமது அதிகார வரம்புகளைத் தாண்டி செயற்பட்டிருந்தால்
அதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் அல்லது அழுத்தங்கள் ஏற்பட்டிருக்குமானால்

இது தொடர்பில் கண்டறிந்து தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதே குறைகேள் பணியகத்தின் நோக்கமாகும்.

முகவரி

கொழும்பு 01 ஜனாதிபதி மாவத்தையில் உள்ள பழைய சார்ட்டட் வங்கிக் கட்டிடத்தின் 03வது மாடியில் இந்த பணியகம் அமைக்கப்பட்டுள்ளது.

தமது முறைப்பாடுகள் அல்லது மனக் குறைகளை மேற்படி பணியகத்திற்கு நேரிலே வருகைதந்து தனிப்பட்ட முறையில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


ஜனாதிபதி செயலகத்தின் குறைகேள் அதிகாரி
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு 01

என்ற முகவரிக்குத் தபால் மூலமும் தமது முறைப்பாடுகளையும் மனக்குறைகளையும் மக்கள் முன்வைக்க முடியும்.

தொலைபேசி இலக்கம்

011-233 8073 என்ற தொலைபேசி ஃ தொலைநகல் இலக்கத்திற்கு

(ombudsman@presidentsoffice.lk)

என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தமது முறைப்பாடுகளை அனுப்பிவைக்க முடியும்.

தமது இயல்பு வாழ்க்கையை மக்கள் அமைதியாகப் பேணுவதற்குத் தடையாக உள்ள போதைப்பொருள் கடத்தல் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பான விடயங்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை தமக்கு அனுப்பி வைக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: