பொகவந்தலாவயில் புகையிலலை தூளுடன் ஒருவர் கைது


பொகவந்தலால செல்வகந்த தோட்டபகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து
204புகைலை தூள் அடைக்கப்பட்ட டின்களோடு சந்தேகநபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் இன்று சனிகிழமை காலை 09மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய கவலுக்கமைய குறித்த தோட்டபகுதிக்கு சென்ற பொலிஸார் வீடு ஒன்றினை சோதனையிட்டபோதே இந்த 204 என். சி.டின்கள் மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொகவந்தலாவ செல்வகந்த தோட்டபகுதியை சேர்ந்தவர் எனவும் சந்தேக நபருக்கு பொலிஸாரினால்
பினைவழங்கப்பட்டுள்ளதோடு எதிர் வரும் புதன்கிழமை ஹட்டன் நீதவான்
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொகவந்தலாவ பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த என்.சி .டின்கள் அதி கூடிய விலைக்கு விற்பனை செயவதற்காக
வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடதக்கது

No comments: