தீர்ப்பின் திகதி வெளியானது


முன்னால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பானது எதிர்வரும் ஜீலை மாதம் 31ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

குறித்த தீர்ப்பானது வில்பத்து கல்லாறு மரிச்சுக்கட்டி வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடழிப்பை மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை  முன்னெடுத்தமைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ரிட் மனு தொடர்பான தீர்ப்பே ஜீலை 31ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

ஜனக்க டி சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகளினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

No comments: