அடையாளப்படுத்தப்பட்ட வெட்டுக்கிளிகள்


நாட்டில் கடந்த வாரங்களில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மஞ்சள் நிறப்புள்ளிகளை கொண்ட வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை ஒரளவு கட்டுப்படுத்த முடிந்தாலும் விவசாயிகள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வெட்டுக்கிளிகள் மாவனல்ல, கிளிநொச்சி, குருநாகல் உள்ளிட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதனை தொடர்ந்து விவசாய திணைக்களம் குறித்த விடையத்தில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளது.

No comments: