நாம் வெற்றிபெற வியூகம் அமைக்கப்பட்டுள்ளது -கணபதி கனகராஜ்


(மலையக நிருபர்)

நுவரெலியா மாவட்டம் உட்பட ஏனய மாவட்டங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்

எதிர்வரும் ஆகஸ்மாதம் நடைபெறவிருக்கின்ற பொதுதேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றஜந்து வேட்பாளர்களும் அமோக வெற்றிபெருவதோடு ஏனய கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள வேட்பாளர்களும் அமோக வெற்றியினை பெருவார்கள் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார் .

இன்று புதன்கிழமை கொட்டகலை சீல்.எல்.எப்.கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து
கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொதுதேர்தலில் நாம் அனைவரும் வெற்றிபெருவதற்கான வியூகம் அமைக்கப்பட்டுள்ளது இலங்கை தொழிலாளர்
காங்ரஸின் புதிய பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தமது தந்தையான் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடைய வழியிலே இலங்கை தொழிலாளர் காங்ரஸில் நீண்டகாலம் செயற்பட்டு வந்தவர் 

 அவர் ஒரு சட்டதரனி படித்தவர் செயற்பட கூடிய ஆற்றலும் திறமையும் கொண்டவர் அதன் அடிப்படையில் எந்தவித மருப்பும்
இல்லாமல் கட்சியின் தேசியசபை ஜீவன் தொண்டமான் அவர்களை பொதுச்செயலாளராக தீர்மானித்திருக்கிறது என்றார்.

No comments: