பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படையினரில் மேலும் 10 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 836 ஆக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் தொற்றுக்குள்ளாகிருந்தவர்களில் தற்போது வரை 1678 பேர் வரை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: