முக்கிய அறிவிப்பு


சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக தனியார் வகுப்பு  கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வகுப்புக்களில் 100 மாணவர்களை மாத்திரம் உள்வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

UPDATED

குறித்த கல்வி நடவடிக்கைகளை ஜூன் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக அனைத்து மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 அதிகபட்சமாக 50 பேருக்கு மாத்திரமே வழிபாடுகளில் ஈடுபட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

--------------------------------------------------------------------------------------------------------------------------

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது மாணவ சமூகத்தை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்து வைரஸ் பரவலை தடுப்பதற்கு பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை தயார்படுத்துவதற்கான சுற்று நிருபம் மற்றும் வழிகாட்டல் கையேடு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் FHB/SHU/COVID/2020 ஆம் இலக்க கொவிட் 19 தொற்றின் பரவலை தடுப்பதற்கு பாடசாலை வளாகத்தில் இருக்க வேண்டிய தயார்நிலை தொடர்பான வழிகாட்டலுக்கு இணைவாக சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் 29 பக்கங்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த கையேட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் படங்களுடன் காட்சிப்படுத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளன.

குறித்த வழிகாட்டல் கையேட்டினை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகம் அதன் பிரிவிலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றிக்கை PDF

--------------------------------------------------------------------------------------------------------------------------
எதிர்வரும் பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 05ம் திகதி இடம் பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இம் முடிவு எட்டப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------
நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படும்.

முதற்கட்டம் - ஜூன் 29 முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை (அதிபர், ஆசிரியர்மார் மற்றும் நிர்வாக ஊழியர்கள் வருகை)

இரண்டாம் கட்டம் – ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை -வகுப்புகள் 5, 11 மற்றும் 13 வரை

மூன்றாம் கட்டம் – ஜூலை 20 (10 மற்றும் 12 ஆம் வகுப்புகள்)

நான்காம் கட்டம் – ஜூலை 27 (3,4,6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள்)

முதலாம் ,இரண்டாம் வகுப்புகள் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் .

செப்ரெம்பர் 13 இல் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடக்கும் .

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகளை செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதிவரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் டலஸ் சற்று முன்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அறிவிப்பு

No comments: