அம்பாறையில் இருவருக்கு விளக்கமறியல்


(சந்திரன் குமணன்)

தென்னந்தோப்பு ஒன்றில் நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றச்சாட்டில் கைதான இரு சந்தேக நபர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

கடந்த 15.6.2020 அன்று நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் நீர்பாய்ச்சுவதற்காக பொருத்தப்பட்டிருந்த ரூபா 18 ஆயிரம் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் களவாடப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் பொலிஸ் கன்டபிள் துரைசிங்கம் உள்ளிட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் வியாழக்கிழமை(25) நிந்தவூர் ,அட்டப்பளம் பகுதியை சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் கைதானவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் களவாடப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேக நபர்களை வெள்ளிக்கிழமை(26) சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார்.

No comments: