ஜீவன் உள்ளிட்ட குழுவினர் இந்திய உயஸ்தானிகருடன் விசேட கலந்துரையாடல்


(நீலமேகம் பிரசாந்த்)

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
கோபால் பாக்லேவிடம் நேற்றைய தினம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர்களான முன்னாள் மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் ,செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் வேண்டுகோளின் பிரகாரம் சில வேண்டுகோள்கள் மலையக மக்களுக்காக முன் வைக்கப்பட்டது.

அதில் பெருந்தோட்டப் பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்,பதுளை,கண்டி மற்றும் ஏனைய பிரதேசங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து அதன் ஊடாக திறமையான மாணவர்கள்,இளைஞர்கள், யுவதிகளை உருவாக்கும் நோக்கில் புதிய தேவையான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்

டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் தாதியர் கல்லூரி அமைத்தல்,வைத்திய முகாமைத்துவ கல்லூரி ஒன்றை அமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் திறமையுள்ள இளைஞர்களை வைத்தியத்துறையிலும் சுகாதாரத்துறையிலும் ஊக்குவித்தல்

அம்புலன்ஸ் வசதிகளை அதிகரிப்பதுடன் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு அவசரமான நேரங்களில் சரியான காலத்திற்கு நோயாளியை கொண்டு செல்லல் போன்ற பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்

போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை கையளித்து வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: