மலையக கல்வியை மேம்படுத்த இந்திய தூதுவர் இணக்கம்.


(நீலமேகம் பிரசாந்த்)

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.இதன் போது பெருமளவில் மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பான விடயங்களே கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் தெரிவித்த போது இந்திய் தூதுவருடனான சந்திப்பில் மலையகத்தில் காணப்படும் 25 விஞ்ஞானப்பிரிவு பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கும் மேலும் பல வசதிகளை மேற்கொள்வதற்கும் கலந்துரையாடப்பட்டது அதேபோல இலங்கை ஆசிரியர்ளை பயிற்சிக்காக இந்தியாவிற்கு அழைத்து செல்வதற்கும் அதேபோல இந்திய ஆசிரியர்களை இலங்கையில் பயிற்சி பெற வைப்பதற்கும் கலந்துறையாடப்பட்டது.

இவ்வாறன விடயங்களை முன்வைத்தவுடனே இவ்விடயத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்ததாக ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

அந்தவகையில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மலையகத்துக்கு த.மு.கூ அறிமுகப்படுத்தப்படுமெனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

No comments: