குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ஏன் செல்லவில்லை கருணா அம்மான் ?


தேர்தல் பரப்புரையின் போது சர்ச்சைகுரிய கருத்துக்களை தெரிவித்தார் என பலதரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வுப்பிரவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் உடல் நலக்குறைவு காரணமாக சமூகமளிக்க முடியாமல் இருப்பதக தனது சட்டத்தரணி மூலம் கருணா அம்மான் குற்றப்புலனாய்வுப்பிரவிற்கு அறிவித்ததுள்ளார் என்று பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வர் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை தமிழர் மகாசபையில் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமாவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பரப்புரையின் போது தான் கொரோனாவை விட கொடியவன் என்றும் ஆயிரக்கணக்கில் இராணுவத்தினரை யுத்தத்தின் போது கொலை செய்ததாகவும் கூறியிருந்தான் இந்த கருத்து பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகியது.

இந் நிலையில் இவரை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகி விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர்  குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார்.

No comments: