தனிமைப்படுத்தல் தொடர்பில் இராணுவம்


45 தனிமைப்படுத்தல் நிலையங்களில்   5,240 பேர் உள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

மேற் குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் முப்படையினரால் நடாத்திச் செல்லப்படுபவையாகும்.


11,709 பேர்  தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளதாக ராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து  தனிமைப்படுத்தலை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


No comments: