வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் தொடர்பானது


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் உள்ளடங்கிய வர்த்தமான இன்று வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள், ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்வரும் நாட்களில் தேர்தலுக்கான திகதி, அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை அல்லது 11,12ம் திகதிகளில் தேர்தல் திகதி அடங்கிய வர்த்தமானி  வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருகோடியே 70 இலட்சம் வாக்கு சீட்டுகள் தேர்தலுக்காக அச்சிடப்படுகின்ற நிலையில் தற்போது, 07 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வேட்பாளர்களின் இலக்கங்கள், குறித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: