திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி-அமாவாசை தீர்த்த கட்டுப்பாடுகள்

(யதுர்ஷன்)

கிழக்கு பிரசித்தி பெற்ற வரலாற்று ஆலயம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய உற்சவ (ஆடி அமாவாசைத் தீர்த்தம்) சம்மந்தமான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்ம 22.06.2020 நண்பகல் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. கஜேந்திரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன் பேது ஆலய வண்ணக்கர், பிரதான பூசகர், திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கலாச்சார உத்தியோகத்தர்கள் , முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக சுகாதார அறிவுறுத்லுடன் பல தீர்மானங்கள் மேற் கொள்ளப்பட்டது.

அவையாவன பின்வருமாறு

உற்சவகால ஆகம விதிப்படியான ஆலய நிகழ்வுகள் அனைத்தும் வழமைபோல் நடைபெறும்.

அனைத்து நிகழ்வுகளும் 50 பேரை கொண்டதாக இருப்பதுடன் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்து நடாத்தப்படும்.

காலை, மாலை பூசைகள் தொடர்ச்சியாக நடைபெறும்.

அன்னதான நிகழ்வுகள் நடைபெறமாட்டாது.

ஆலய உள்ளேயோ, வெளியேயோ கடைகள் எதுவும் புதிதாக அமைக்கப்படமாட்டாது.

காவடி,கற்பூரச்சட்டி,அங்கப்பிரதட்சணம் செய்வது போன்ற நிகழ்வுகள் தவிற்க்கப்பட்டுள்ளது.

திருவிழாவின் போது வடம்பிடித்து தேர் இழுத்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீர்த்தோற்சவத்தின் போது அமுது கொடுத்தல் வீதிகளில் செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது.

தீர்திதோற்சவத்தின் போது பிதிர்க்கடன் செய்தல் மட்டுப்படுத்திய அளவில் ஆலய குருமார்களாக பிரித்து நடைமுறைப்படுத்தப்படும்.


No comments: