கிலனுகி தோட்ட சிறுவர் நிலையத்தில் உள்ள குளவி கூட்டினை அகற்றுமாறு கோரிக்கை


(சதீஷ்)

கிலனுகி தோட்ட சிருவர் நிலையத்தில் உள்ள சட்டிகுளவி கூட்டினை அகற்றி
தருமாறு மக்கள் கோறிக்கை.

மஸ்கெலியா பொலிஸ்பிரிவிற்குட்டபட்ட மஸ்கெலியா சாமிமலை டிசைட் கிலனுகிதோட்டத்தில் உள்ள சிருவர் நிலையத்தில் உள்ள கூறையில் பாரிய சட்டி குளவிகூடு ஒன்று உள்ளமையினால் குறித்த தோட்டபகுதியில் உள்ள சிருவர் நிலையத்தில் சிருவர்கள் மற்றும் குழந்தைகளை சிருவர் நிலையத்தில் விட்டு செல்லும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்
நோக்கி வருவதாக தோட்டமக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

குறித்த சிருவர் நிலையத்தில் 20கும் மேற்பட்ட குழந்தைகள் நலாந்தம் விட்டு
செல்வதாகவும் குறித்த சிருவர் நிலையத்தில் உள்ள குளவி கூடு நாளுக்கு நாள் பெரிதாகி வருகின்றமையால் பெற்றோர்களும் சிருவர்களும் அச்சத்தில் நலாந்தம் வாழ்ந்து வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்ளனர் .

இந்த தோட்ட சிருவர் நிலையத்தில் ஒன்று இரண்டு மற்றும் மூன்று வயது
குழந்தைகளை கொண்ட சிருவர்கள் சிருவர் நிலையத்தில் இருந்து வருகின்றனர் இது தொடர்பில் நாம் மஸ்கெலியா பொலிஸாருக்கும் அறிவித்துள்ளோம் இதேவேலை தோட்ட நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டு தோட்ட நிர்வாகம் ஊடாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இது வரையிலும் குறித்த
சிருவர் நிலையத்தில் உள்ள குளவி கூட்டினை அகற்ற நடவடிக்கை எடுக்கபட
வில்லை

கடந்தவாரம் குளவியின் தாக்குதலுக்கு உள்ளாகி தேயிலை கொழுந்து பறித்த இரண்டு பெண் தொழிலாளர்கள் தாக்கதலுக்கு உள்ளாகி பழியான சம்பவங்களும்
பதிவாகியுள்ளது

எனவே இந்த பாரிய குளவிகூட்டினை அகற்றி குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்







No comments: