பிறந்தவுடன் புதைக்கப்பட்ட சிசு நோர்வூட்டில் சம்பவம்


(சதீஷ்)

பிறந்து ஒரே நாளிலான சிசி ஒன்று புதைக்கப்பட்டுல்லதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் நேற்று வெள்ளிகிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்

நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வுட் ஜனபதய கொலனிபகுதியில் மானா தோப்புக்குள்  உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில்  குறித்த சிசுவின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை 6.30 மணியளவில்  பொலிஸ் அவசர
இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பொதுமக்களால் கொடுக்கப்பட்ட தகவலுக்கமையஅங்கு சென்ற நோர்வுட் பொலிஸார்  விசாரனைகளை ஆரம்பித்துடன் சிசுவை பிரசவித்த பெண்ணை 1990 அம்புலன்ஸ் வண்டி ஊடாக  டிக்கோயா கிழங்கன்வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஹட்டன் நீதிமன்ற நிதவான் முன்னிலையில் புதைக்கப்பட்ட சிசுவானது மீட்கப்பட்டு மேலதிக விசாரணகைள் இடம் பெற்று  வருகின்றது.

சிசுவை பிரசவித்த குறித்த 26 வயதுடைய பெண் இதற்கு முன்னர் ஒரு பிள்ளையின் தாய் எனவும் இவர் திருமணமாகாதவர் எனவும் இரண்டாவது முறையாக குழந்தையை பிரவசித்து கொண்டமைகான தடையங்களும் வீட்டின் அருகாமையில் காணப்படுவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனணகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பிலான விசாரனைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

No comments: