எல்பொட புதுக்காட்டில் பொறிக்குள் சிக்கி இரு சிறுத்தைகள் மீட்பு.


(நீலமேகம் பிரசாந்த்)

புஸல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்பொட புதுக்காடு எனும் பகுதியில் இரு சிறுத்தைகள் மீட்கப்பட்டுள்ளது.

23/06/2020 செவ்வாய்க்கிழமை விறகுக்காக சென்ற தோட்ட மக்கள் இருசிறுத்தைகளையும் கண்டு வன ஜீவராசி திணைக்களத்துக்கு அறிவித்ததையடுத்து வன ஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு விரைந்தது பார்வையிட்டபோது அதில் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளது.

மற்றொரு சிறுத்தை காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. காயமடைந்துள்ள சிறித்தையை பாதுகாப்பாக மீட்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: