தெரேசியா தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்.


(சதீஸ்)

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் பொகவந்தலாவ தெரேசியா மோரா ஆகிய இரண்டு தோட்ட மக்கள் இன்று திங்கள்கிழமை காலையில் இருந்து தொழிலுக்கு செல்லாது தெரேசியா தோட்டதொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் .

தோட்ட தொழிலாளர்கள் நால் ஒன்றுக்கு அதிகமாக பறிக்கப்படும் தேயிலை
கொழுந்தில் ஒரு தொழிலாளியிடம் இருந்து மாத இருதியில்100மற்றும் 70கிலோ தேயிலை கொழுந்தினை தோட்ட நிர்வாகம் பறிமுதல்செய்து கொள்வதாகவும் கடந்தமாத தொழிலாளி ஒருவரின் சம்பளம் 3000ம் ருபா மாத்திரம் காணப்படுகிறது 

இந்த சம்பளத்தினை வைத்து கொண்டு நாம் எப்படிவாழ்க்கையினை நாடாத்துவது என வழியுருத்தியும் தோட்டமுகாமையாளர் தோட்ட நிர்வாகத்தைவிட்டு வெளியேறவேண்டுமென வழியுருத்தியும் இந்த ஆர்பாட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரேசியா தேயிலை தொழிற்சாலையில் தொழில் பறிந்து வந்த தொழிலாளர்களை வெளியேற்றி தொழிற்சாலையின் பிரதான நுளைவாயினை தொழிலாளர்கள் பூட்டியுள்ளதோடு மோரா தோட்ட மக்கலாள் பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்தினை தொழிற்சாலைக்குள் அனுமதிக்க முடியாதுயெனவும் ஆர்பாட்டத்தில்
ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரேசியா தோட்ட முகாமையாளர் சுகத் ஆரியரத்னவிடம் தொடர்பு கொண்டு வினவியபோது 

வரட்சியான காலப்பகுதியில் தேயிலை கொழுந்து குறைவாக கானப்பட்ட கடந்த இரண்டு மாதகாலமாக தொழிலாளர்கள் நால் ஒன்று 8கிலோவிற்கு ஒரு நால் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் 

கொழுந்து கானப்படுகின்றகாலப்பகுதியில் குறித்த கிலோ அளவினை தோட்ட நிர்வாகம் பறிமுதல் செய்து கொள்ளும் விடயம் தொடர்பில் தோட்ட தொழிற்சங்க தலைவர்களோடு கலந்துறையாடிய பின்னரே இந்த முடிவினை நாம் எடுத்தோம்

 ஆனால் தொழிலாளர் குற்றம் சுமத்துவது போது நாம் 100கிலோவினை நாம் பறிமுதல் செய்யவில்லை ஆனால் எம்மோடு கலந்துறையாடிய பின்பு மற்றய இரண்டு தோட்டங்களில் உள்ள மக்கள் வழமைபோல் தொழில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

No comments: