அம்பாறை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு


(சந்திரன் குமணன்)

அம்பாறை மாவட்டம் மருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவுக்குற்பட்ட மருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் அதிகமான குதிரைகள் காணப்படுகின்றது. குறித்த குதிரைகள் அப்பகுதியில் ஒன்றோடு ஒன்று சண்டை பிடிப்பதோடு அதி வேகமாக ஓடுகின்றது.

குறித்த குதிரைகள் வீதிகளில் நடமாடுவதனால் பாதசாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகுவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றது.

சுமார் சிறியது முதல் பெரிய குதிரைகள் வரை காணப்படுவதுடன் வீதியில் செல்லும் மக்களை சீண்டவும் முற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: