அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டது


(யதுர்சன்)

சர்வதேச சுழல் வாரத்தினை முன்னிட்டு நாட்டில் பல பாகங்களில் சூலழியல் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

அந்தவகையிவ் சர்வதேச சூழல் வாரத்தை முன்னிட்டு அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் களுதாவளை பிள்ளையார் ஆலய வளாகத்தில்  களப்பு பகுதியில் கரையோர கண்டல் தாவர,மர நடுகை நிகழ்வு இன்று இடம் பெற்றது. 

இன்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்று திருக்கோவில் உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் மற்றும் கமநலசேவை திணைக்கள உத்தியோத்தர்கள் மற்றும் தம்பிலுவில் களுதாவளை பிள்ளையார் ஆலய பரிபாலனசபையினர் மற்றும் மீனவர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(அனுமதியின்றி புகைப்படங்கள் மற்றும் எழுத்துக்களை திருடுவது குற்றமாகும்)
No comments: