வீடு திரும்பய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

36 வயதுடைய குறித்த பெண் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தொற்றுறுதியாளராக இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந் நிலையில் குறித்த பெண்ணுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதனையடுத்து இவர் மீண்டும் சிகிச்சைகளுக்காக கொழும்பு ஜ.டி.எச் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளர்.

அனுராத புரத்தினை சேர்ந்த குறித்த பெண் கடந்த இரண்டு  நாட்களுக்கு முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: