விசேட கலந்துரையாடல் நடைபெறுகின்றது


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடல் இடம் பெற்றுவருவாக எம்மால் அறியமுடிகின்றது.

குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று காலை 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி பிரசுரித்துள்ளது.

தேர்தல் திகதி குறித்து அணையாளர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வேட்பாளர்களின் இலக்கங்கள் வெளியிடும் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர்களின் இலங்கம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருகோடியே 70 இலட்சம் வாக்கு சீட்டுகள் தேர்தலுக்காக அச்சிடப்படுகின்ற நிலையில் தற்போது 07 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments: