ஹட்டனில் பலத்த குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்


(சதீஸ்)

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் பலநத்த குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா காபெக்ஸ் தோட்ட 05ம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் ஒருவர் மீது 30கும் மேற்பட்ட குளவிகள் தாக்கி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 09.06.2020.செவ்வாய்கிழமை மதியம் 12மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார்
மேலும் தெரிவித்தனர்.

05ம் இலக்க தேயிலை மலையின் தேயிலை மரத்தில்இருந்த குளவி கூடு குறித்த பெண்ணை 30கும் மேற்பட்ட குளவிகள் தாக்கி மயக்கமடைந்த நிலையில் காசல் ரீவைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண் தொழிலாழி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது

No comments: