குளவிக்கூடுகளை கண்காணிக்க தோட்ட நிர்வாகம் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.வைத்தியர் சாவித்ரி ரவிவர்மா


(நீலமேகம் பிரசாந்த்)

தோட்டப்பகுதிகளில் குளவிகளின் தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதோடு பலர் அடிக்கடி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கு முன்னரை போலவே தோட்டப்பகுதிகளில் குளவிக்கெடுகளை கண்காணிக்க ஊழியர்களை நியமிக்க வேண்டுமென கொட்டக்கலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் சாவித்ரி ரவிவர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ஆரம்ப காலங்களில் தோட்டப்பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் தேயிலை மலைகளுக்கு இருவர் அனுப்பி வைக்கப்பட்டு குளவி கூடுகள் இருக்கின்றதா என கண்காணிக்கப்பட்ட பிறகே தொழிலாளர்கள் பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

ஆனால் அந்நிலை மாறியுள்ளது அதனாலேயே அதிகமாக தோட்டத்தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இழக்காகுவதாக தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில் தோட்டப்பகுதிகளில் தோட்டத்தொழிலாளர்கள் மீதான கரிசணை தோட்ட நிர்வாகம் பெரியளவில் காட்டப்படவில்லை.

அதனாலேயே இவ்வாறான பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.அரசியல்வாதிகள் தோட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து குளவிக்கூடுகளை அழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வைத்தியர் சாவித்ரி ரவிவர்மா குறிப்பிட்டார்.a

No comments: