சாரதி அனுமதிப் பத்திர கால எல்லை நீடிப்பு


சாரதி அனுமதிப்பத்திரம் நிறைவடையும் கால எல்லை 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி முதல் 30ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் முடிவடையும் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்காக கால எல்லையே நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 03 மாத அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 06 மாத காலமாக நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் யூலை மாதம் 01ம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம்  30ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிறைவடையும் சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை அது நிறைவடையும் தினத்தில் இருந்து 03 மாதங்கள் நீடிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: