மக்களுக்கு அனுமதியில்லை


யாழ். நல்லூர் மற்றும்  திருகோணமலை , கிழக்கில் இருந்து கதிர்காம திருத்தலத்திற்கு பாத யாத்திரைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சமய கிரியைகள் மற்றும் பாரம்பரிய மற்றும் வழிபாடுகளுக்கு  முன்னுரிமையளித்து முக்கிய புண்ணியஸ்தலங்களிலும் வழிபாட்டிடங்களிலும் இம்முறை திருவிழாக்களை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தியவடன நிலமே உள்ளிட்ட பஸ்நாயக்க நிலமேக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கண்டி தலதா மற்றும் கதிர்காமம் பெரஹர உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை சுகாதார வழகாட்டலுக்கு அமைய முன்னெடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 விசேட (முக்கிய) வழிபாட்டு இடங்களிலும் வணக்கஸ்தலங்களிலும் நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது

- ஜனாதிபதி ஊடகப்பிரிவு-

No comments: