மஸ்கெலியா வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் பாரிய குளவிகூடுகள்


(சதீஷ்)

நோயாளர்கள் வைத்தியர்கள் என பலரும் அச்சத்தில் . உரிய அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென கோறிக்கை.

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்கெலியா பிரதேச
வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் நான்கு பாரிய குளவிகூடுகள் நீண்டகாலமாக கானப்படுகின்றமையால் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெரும் நோயாளர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் ஆகியோர் நலாந்தம் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இந்த நான்கு குளவி கூடுகளும்
கானப்படுகின்றமையால் நலாந்தம் சிகிச்சைபெற வருகின்ற நோயாளர்கள் மற்றும் வாடுகளில் தங்கி சிகிச்சைபெரும் நோயாளர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்கிவருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மஸ்கெலியா பகுதியில் மாத்திரம் 60ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர் அவசரதேவைகளுக்கு குறித்த வைத்தியசாலையினை நாடுகின்றனர் வைத்தியசாலையில் காணப்படும் குளவிகூடுகள்
தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த குளவிகூடுகளை இதுவரையிலும் அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை
என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

குறித்த வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் கானப்படுவதோடு
வைத்தியசாலையில் கானப்படுகின்ற குளவி கூடுகளை அகற்றி முறையாக இயங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

 கடந்த வாரங்களில் இந்த குளவி தாக்குதல் காரனமாக இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிர்ழந்த சம்பவங்களும் பதிவாகியிருக்கிறது இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்.
No comments: