ஆலயத்திற்குள் பாதணியுடன் சென்ற விடையம் நடவடிக்கை எடுக்கப்படும் -அங்கஜன்


நயினாதீவு ஆலயத்தினுள் பொலிஸார் மற்றும் கடற்படையினர் பாதணிகளுடன் உட் சென்ற சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் புகழ் பெற்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பொலிசார் மற்றும் கடற்படையினர் பாதணிகளுடன் காணப்பட்ட ஒளிப்படம் சைவ மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது

இந்தச் சம்பவம் தொடர்பில் கீரிமலை மெய்கண்டான் ஆதீனம் தனது கண்டனத்தை வெளியிட்டதுடன் சம்பவம் தொடர்பில் உமாபதிசிவம் அடிகளார் என்னிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கவனத்திற்கும் அரசாங்க அதிபரின் கவனத்திற்கும் கொண்டு வந்தேன்

சம்பவம் தொடர்பில் பொலிசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆலய சூழலில் கடமையில் ஈடுபடும் பொலிஸார் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதுடன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ஐம்பது பேராக உட் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்

No comments: