கல்முனை பொலிஸ் நிலையத்தில் புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்


(சந்திரன் குமணன்)

அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்

அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த கமல்ராஜ் (21) என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: