மாணவர்களின் வீடுகளுக்கு உலர் உணவுப்பொதி -கல்வி அமைச்சு


12 இலட்சம் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்க ஏற்பபடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வரும் இரண்டு வாரங்களுக்ளுள் வலையக் கல்வி பணிமனை ஊடாக இந் நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் போசாக்கு உணவுகள் உள்ளடங்கிய உணவுப்பொதிகள் மாணவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பித்ததும் மதிய உணவு வழங்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்

கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படாமையினால் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
No comments: