விபத்தில் சிக்கியவர் ஏழு மாதங்களின் பின்னர் மரணம்


(எச்.எம்.எம்.பர்ஸான்)

கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் திங்கட்கிழமை (15) மரணமடைந்தார்.

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையில் ஊழியராக பணி புரியும் மாவடிச்சேனை பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான எம். புவாத் என்பவர் துவிச்சக்கர வண்டியில் கடமைக்குச் செல்லும் போது வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஐஸ் தொழிற்சாலைக்கு முன்பாக வைத்து வேகமாகச் சென்ற கார் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இவர் நீண்ட காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் வைத்தியர்களால் கைவிடப்பட்ட நிலையில் நேற்றையதினம் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவரின் உடல் அன்றையதினம் ஓட்டமாவடி முகைதீன் ஜும்மாப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: