தேர்தல் கட்டுப்பாடுகள் இவைதான் மீறினால் கைது


தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் முன்னெடுப்பினை தடுப்பதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தவகையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் புகைப்படம் மற்றும் தேர்தல் தொடர்பிலான விபரம்  உள்ளடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் இது சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும்.

பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் கீழ் இந் நடவடிக்கையில் பொலிசார் களமிறங்கியுள்ளனர்.

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பதாதைகள் அகற்றப்படுவதுடன் தேர்தல் தொடர்பில் துண்டுபிரசுரங்கள் அல்லது ஏதேனும் ஆவணங்கள் வைத்திருந்தால் குறித்த நபர்மீது தேர்தல் நடைமுறைகளுக்கு அமைவாக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: