காயங்களுடன் காணப்பட்ட நபரொருவர் மீட்பு


(எச்.எம்.எம்.பர்ஸான்)

அடிகாயங்களுடன் காணப்பட்ட நபரொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று  வாகனேரி பகுதியில் இடம் பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி - குளத்துமடு பகுதியால் ஒருவர் செல்லும் போது சனநடமாட்டம் இல்லாத இடத்தில் நபரொருவர் இரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டுள்ளார்.

வீட்டிலிருந்து வெயியே சென்ற 40 வயதுடைய நபர் ஒருவரை சனநடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இருவர் வழிமறித்து பொல் தடிகள் மூலம் தாக்குதலை நடத்திவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக  தெரியவந்துள்ளது.

காயங்களுடன் கிடந்த நபர் தொடர்பான தகவல்களை அவரது உறவினர்களிடம் தெரியப்படுத்திய பின்னர், உறவினர்கள் விரைந்து செயற்ப்பட்டு 1990 அம்பியூலன்ஸ் சேவை உதவியுடன் காயமடைந்த  குறித்த நபரை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

 தாக்குதல்  தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: