அனுமதி தொடர்ந்தும் நீடிப்பு


சுகாதார அமைச்சின், அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக எதிர்வரும் திங்கட்கிழமை பொது போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த, அமர வீர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில் மற்றும் போக்குவரத்து, சபைக்கு சொந்தமான அனைத்து பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மறு அறிவிப்பு வரை தினமும் இரவு 11 மணிக்கு ஊரடங்கு, அமுல்படுத்தப்பட்டு காலை 04, மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு ஹம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான, போக்குவரத்திற்கு முன்பு வழங்கப்பட்டிருந்த அனுமதி தொடர்நதும் நீடித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: