25,942 பேருக்கு எதிராக வழக்கு


கொரோனா வைரஸ் தொக்கம் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் பலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதாகியிருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் கைதுடி செய்யப்பட்டவர்களில் 25,942 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 70 ஆயிரத்து 272 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து 19 ஆயிரத்து 952 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments: