சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களின் மறைவுக்கு அங்கஜன் இரங்கல்


இலங்கையின் மூத்த நிர்வாக அதிகாரியும் சமூக சேவகருமான சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவர் செய்த சேவைகள் என்றும் அவரை நினைவூட்டும் என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கஜன் இராமநாதன்
வடக்கு மாகாணமும் ,கிழக்கு மாகாணமும் இணைந்திருந்தபோது திட்டமிடல் பிரதிப் பணிப்பாளராகவும், வடக்கு கிழக்கு மாகாண பிரதான செயலாளராகவும் பணியாற்றியபோது இரண்டு மாகாணங்களின் வளர்ச்சிக்குஅரும்பாடுபட்டவர் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜா. வடக்கு, ,கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி,கல்வி ஆகியவற்றைத் திட்டமிட்டு உயர்த்திய பெருமைக்குரியவர் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜா அவர்கள்.

வடமாகாணத்தின் முதலாவது பிரதம செயலாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை உறுப்பினர், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் போன்ற பதவிகளை வகித்தபோது அளப்பரிய பல சேவைகளைச் செய்தார்.

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட அமரர் வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் விஷேட பூஜை செய்வதற்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற பின்னரும் அபிவிருத்தியில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்ட அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றுயாயினும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்திப்பதாக அங்கஜன் இராமநாதன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments: