சர்சைக்குரிய கருத்து தொடர்பில் இருவரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.


காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கருணா கொரோனாவை விட கொடியவன் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந் நிலையில் இதற்கு எதிர் கருத்து வழங்கும் வகையில் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தான் கொரோனாவை விட கொடியவன் தான் ஆனையிறவில் 3000ம் இராணுவத்தினரை கொலை செய்தவன்  என்று சர்ச்சைக்குள்ளாகியுள்ள கருத்தினை தெரவித்திருந்தார்.

இக் கருத்தானது நாடளாவிய ரீதியில் பலரது விமர்சனத்திற்குள்ளாகிய கருத்தாக மாறியிருந்து.

இதனடிப்படையில் இவர்கள் இருவரையும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: