பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தார் வேட்பாளர் அ.தமிழ்நேசன்


சுகாதார அறிவுறுத்தல்களையும் தேர்தல் விதி முறைகளையும் பின்பற்றி 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 05ம் திகதி இடம் பெறவுள்து.

இந் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் நாடளாவிய ரீதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்.அ.தமிழ்நேசன் தனது பிரச்சார நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்தார்.

அம்பாறை (திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில்) களுதாவளைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து தனது பிரச்சார நடவடிக்கைகளை அவர் இன்று ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: