கொழும்பில் இருந்து புறப்படும் சாரதிகளின் கவனத்திற்கு


கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து பயணிக்கும் பேருந்துகள் உரிய நேர அளவிற்குள் தமது இலக்கினை அடைகின்றதா அல்லது இலக்கிகை அடையும் நேர அளவிற்கு மேலதிக நேரத்தினை எடுத்துக் கொள்கின்றதா என கண்காணிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக நேரம் எடுக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் உருவாகுவதற்கு காரணமான அமையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை கண்காணிப்பதற்காக 267 இடங்களுக்கு செல்லும் பேருந்துக்களை 22  தரிப்பு இடங்களில் கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த கண்காணிப்பு நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


No comments: