நாகரீகம் கற்றுக் கொடுத்ததே (இ.தொ.கா) தான் -மருதபாண்டி
(சதீஸ்) 

மலையகத்திற்கே அரசியல் நாகரிகம் கற்றுக்கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சிலர் ஊடகங்களில் விமர்சிப்பது வேடிக்கையாக இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

நெஞ்சுருதியும், நேர்மை திடமும், வஞ்சகமில்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் வல்லமையும் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்கும், மலையகத்தின் இளைய சமூகத்திற்கும் பாரிய சேவைகளை செய்துள்ளது. கடந்த 75 வருடங்களுக்கு மேலாக எமது சமூகத்தை ஒரு மானமுள்ள சமூகமாக மாற்றியமைத்த வரலாற்று பெருமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸையே சாரும்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் தொட்டு இன்றுவரை இந்த மக்களுக்காக அர்ப்பணிப்போடு சேவையாற்றிக்கொண்டு இருக்கின்ற ஒரு அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள். 

இந்திய வம்சாவழி மக்கள் ஒரு துணிச்சல் மிக்க வீர தலைவனை இழந்து வாடுகின்றனர். தன் குடும்பத்தில் ஒருவரை இழந்ததை போல் தவிக்கின்றனர். அதற்குள் பலர்விமர்சனங்களை தொடுத்து அரசியல் குளிர்காய முனைகின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையத்திற்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்குமே பெரும் இழப்பாகும். மலையகத்தை பொறுத்தவரையில் எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்திருக்கலாம். அவர்களை எண்ணி மக்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை.

ஆனால் மலையகத்தையும் மலையக மக்களையும் பாதுகாத்த ஒரு உன்னத தலைவர்களாக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானையும் அமரர் ஆறுமுகன் தொண்டமானையுமே மலையக மக்கள் பார்க்கின்றார்கள். மலையக மக்களின் அன்பையும் அரவணைப்பையும் வென்ற ஒரே தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். எவராலும் அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது.

சிலர் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் சப்ரகமுவ,மேல் மாகாணம் ஆகிய பகுதிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு இணைந்து போட்டியிட்டுள்ளனர். அதனை மறந்து சிலர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை இவ்வாறு குறைகூறுவது கவலைக்குரியது. காலத்தின் மாற்றத்திற்கேற்ப அவர்களின் நாக்கும் புரலுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: