ஐக்கிய மக்கள் சக்தியின் வட கொழும்பு தேர்தல் அலுவலகம் சஜித்தினால் திறந்து வைப்பு.


ஊடகப் பிரிவு

வட கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் சஜித் பிரேமதாசவினால் நேற்று (23)
திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியத் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் கொழும்பு மாவட்ட வேட்பாளரும்,
ஜனநாயக்க மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் அவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு
மாவட்ட வேட்பாளரும், ஜனநாயக்க மக்கள் முன்னணியின் தேசிய அமைப்புச் செயலாளருமான கலாநிதி வி.ஜனகன் ஆகியோரும் கலந்து
சிறப்பித்தார்கள்.No comments: