ஹற்றன் தலவாக்கலை பிரதான வீதியில் விபத்து ஒருவர் ஸ்தலத்தில் பலி !..


(சுசிதரன்)

நுவரெலியா மாவட்டம், ஹற்றன் தலவாக்கலை பிரதான                             (ரெஷிதா பாம் ற்கு முன்னால்)  வீதியில் சற்று முன்னர் இடம் பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த இளைஞன் அதிவேகத்துடன் உந்துருளியை இயக்கச் செய்ததன் காரணமாகவே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கொட்டகலை பகுதியில் இருந்து ஹற்றன் நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளியே விபத்றிற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியளர் மேலும் தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தலவாக்கலை  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments: