பெருந்தோட்ட கம்பனியின் கங்கானிமார்களுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறி

(பி.கேதீஸ்)

தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி ஏற்பாட்டில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் கங்கானிமார்களுக்கு 6 மாத கால தலைமைத்துவ வலுவூட்டல் பயிற்சி நெறி ஒன்றின் ஆரம்ப நிகழ்வு தலவாக்கலை ரதல்ல விளையாட்டு மைதான கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது. 

இச் செயலமர்வில் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் ஹொரன, கௌனிவெலி பெருந்தோட்ட கம்பனிகளைச் சேர்ந்த சுமார் 65 ற்கு மேற்ப்பட்ட கங்கானிமார்கள் கலந்துக்கொண்டனர். 

இதன் ஆரம்ப நிகழ்வில் பெருந்தோட்ட கம்பனிகளின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ரொசான் ராஜதுரை மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி இயக்குனர் நிஷாந்த அபேசிங்க, ஹொரன கம்பனியின் பிரதி நிறைவேற்று அதிகாரி உதேனி நவரத்ன, களனிவெளி மனித வள பொது முகாமையாளர் அனுராத கமகே,தலவாக்கலை கம்பனி மனித வள முகாமையாளர் ராம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

No comments: